திறன்களை நிலைநிறுத்துதல்:
40 சிவில் சமூக அமைப்புகளின் (CSOS) உறுப்பினர்கள் புவியியல் தகவல் அமைப்புகளில் (GIS) தேர்ச்சி பெற்றனர், அவற்றை தரவு காட்சிப்படுத்தல் வழிகாட்டிகளாக மாற்றினர். இப்போது அவர்கள் தங்கள் காரணங்களை வெளிப்படுத்தவும், தாக்கத்துடன் தங்கள் கதைகளைச் சொல்லவும் சக்திவாய்ந்த வரைபடங்களை உருவாக்க முடியும்!
250 உறுப்பினர்கள் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) பயிற்சித் திட்டத்தைப்பெற்றனர் . இது சிறந்த தகவல்தொடர்பு, வலுவான பரிந்துரைகள் மற்றும் அவர்களின் முக்கிய பணிக்கான மேம்பட்ட நிரல் மேலாண்மை ஆகியவற்றை வளர்ச்சிபெற உறுதுணையாகின்றது.
உபகரணங்கள் வழங்குதல்:
உபகரணங்களின் கையிருப்பு (27 மடிக்கணினிகள், 05 மேசைக்கணணிகள், 10 பல் இயக்க அச்சுப்பொறிகள், 20 வெளிப்புற வன் தட்டுக்கள்) அவற்றின் செயல்பாடுகளை சீராக இயங்க வைக்க தேவையான கருவிகளை உறுதி செய்கிறது.
ஒரு பிரத்யேக தகவல் தொழில் நுட்ப உதவிவழங்கல், தொழில்முறை புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளி சேவைகள் மற்றும் GIS மேப்பிங் உதவி ஆகியவை அவர்களின் தொழில்நுட்ப அறிவை அதிகரிக்க செய்தன.